பண மோசடி புகார்- பிக்பாஸ் பிரபலம் கைது

குறும்படம் எடுப்பதற்கு முதலீடு செய்யக்கோரி ஏமாற்றியதாகவும் கூடுதலாக ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் வாலிபர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
நடிகை வர்ஷினி
நடிகை வர்ஷினி
Published on
Summary

சென்னை கிண்டி நட்சத்திர ஓட்டலில் வாலிபரை மிரட்டி ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை வர்ஷினி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வாலிபரை ஓட்டலுக்கு வரவழைத்து ரூ.50 ஆயிரம் பணம், செல்போன் பறித்ததுடன், குறும்பட முதலீடு பெயரில் ஏமாற்றி, கூடுதலாக ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி நட்சத்திர ஓட்டலில் வாலிபரை மிரட்டி ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் பிக்பாஸ் பிரபலம் நடிகை வர்ஷினியை கிண்டி போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

வாலிபரை ஓட்டலுக்கு வரவழைத்து ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்ததாக நடிகை வர்ஷினி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறும்படம் எடுப்பதற்கு முதலீடு செய்யக்கோரி ஏமாற்றியதாகவும் கூடுதலாக ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் வாலிபர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வர்ஷினியை போலீசார் கைது 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதாகி வர்ஷினி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். மேலும் இவர் பல்வேறு படங்களில் துணை நடிகையாகவும், குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com