பவதாரணி கடைசியாக இசையமைத்த `ஹே கருகருவா' பாடல் வெளியானது

ஈசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புயலில் ஒரு தோணி.இப்படத்திற்கு மறைந்த பாடகி, இசையமைப்பாளர் பவதாரணி இசையமைத்துள்ளார்.
பவதாரணி கடைசியாக இசையமைத்த `ஹே கருகருவா' பாடல் வெளியானது
Published on

ஈசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புயலில் ஒரு தோணி. இப்படத்தை பிஜி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் அர்ச்சனா சிங், விஷ்ணு பிரகாஷ் ராகவன், ராதாரவி, சந்தானபாரதி, நமோ நாராயணன், திலீபன் , இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு மறைந்த பாடகி, இசையமைப்பாளர் பவதாரணி இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த கடைசி திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இட்ன்ஹ படத்தின் முதல் பாடலான ஹே கருகருவா பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இந்த பாடலை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் மானசி இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை சிநேகன் எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா அவரது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டார்.

திரைப்படத்தை குறித்த மற்ற தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com