அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் பட பூஜை!

அர்ஜுன் தனது மனைவி நிவேதிதா அர்ஜுனுடன் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.
Action King Arjun Movie Pooja at ayodhya
Published on: 
Summary

‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்வுகளை மையமாகக் கொண்டு, ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்திய சினிமாவில் முதல்முறை

நாட்டின் மிகவும் போற்றப்படும் ஆன்மிகத் தலங்களில் ஒன்றான அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தில் பூஜை நடத்தப்படும் முதல் திரைப்படம் இதுவே ஆகும்.

இது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், வரலாற்றுச் சாதனையாகவும் அமைந்துள்ளதாகப் படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பு மற்றும் இயக்கம்

உண்மைச் சம்பவங்களான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை, பிரசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அனூப் மோகன் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தை அர்ஜுன் இயக்குகிறார்.

முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு

அயோத்தியில் நடைபெற்ற இந்தச் சிறப்புப் பூஜையில், இயக்குநர் அர்ஜுன் தனது மனைவி நிவேதிதா அர்ஜுனுடன் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.

மேலும், இந்த விழாவில் திரைப்படத் துறையினர் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், சிறப்பு விருந்தினர்களும் திரளாகப் பங்கேற்றுப் படக்குழுவினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X