

'ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கும் புதிய பிரம்மாண்ட பான்-இந்திய தேசபக்தித் திரைப்படத்தின் பூஜை விழா, நாளை அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
Presidential Movies International நிறுவனத்தின் 3-வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தைத் தயாரிப்பாளர் அனுப் மோகன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.
இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் பூஜை விழா அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை என்பதால், இவ்விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை நடைபெறும் இந்தச் சிறப்பு விழாவில் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியிடப்படவுள்ளது. இதில் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தேசப்பற்று, வீரம் மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் உருவாகும் இப்படத்தை அர்ஜுன் இயக்குவதுடன், முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ள இத்திரைப்படத்தில், பாலிவுட் மற்றும் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணையவுள்ளனர்.
பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் அனுப் மோகன் இப்படத்தைத் தயாரிக்க, ஜோஸ் எம். தாமஸ் ராய் செயல் தயாரிப்பாளராகப் பணியாற்ற உள்ளனர்.