GOAT ஷூட்டிங் - லொகேஷனுக்காக மாஸ்கோ சென்ற அர்ச்சனா கல்பாத்தி

GOAT ஷூட்டிங் - லொகேஷனுக்காக மாஸ்கோ சென்ற அர்ச்சனா கல்பாத்தி

ஏஜிஎஸ் பட நிறுவனத்தின் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்விரைவில் மாஸ்கோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன
Published on

ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் 'ஷூட்டிங்' பலகட்டமாக நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது. இதில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு இன்று விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்ய உள்ளார். அதைதொடர்ந்து விரைவில் மாஸ்கோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com