நடிகை அஞ்சு குரியனுக்கு திருமணம் - நீண்டநாள் காதலர் ரோஷனை கரம்பிடித்தார்

நடிகை அஞ்சு குரியனுக்கும் ரோஷனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
 Anju Kurian-Roshan
Published on: 

திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சு குரியன் தனது நீண்டநாள் காதலரான ரோஷனை கரம் பிடித்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் ஏராளமான ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த இவர்களின் திருமணம், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றுள்ளது. 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஓகோ எந்தன் பேபி', 'இதயம் முரளி' உள்ளிட்ட பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனம் ஈர்த்தவர் அஞ்சு குரியன் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அஞ்சு குரியனுக்கும் ரோஷனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது.

 Anju Kurian-Roshan

அதன்பிறகு திரைப்படப் பணிகளில் பிஸியாக இருந்த இவர்கள், தற்போது தங்களது திருமணத்தின் மூலம் காதலைத் திருமண பந்தமாக மாற்றியுள்ளனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட நடிகை

தனது திருமண நாளைத் தன் வாழ்நாளின் மிக அழகான அத்தியாயம் எனக் குறிப்பிட்டுள்ள நடிகை அஞ்சு குரியன், சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். இது வெறும் இரு இதயங்களின் வாக்குறுதி மட்டுமல்லாமல், இறைவனின் முன்னிலையில் எடுக்கப்பட்ட ஒரு புனிதமான சபதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 Anju Kurian-Roshan

தனக்குள் இருக்கும் சிறு குழந்தை தன் நீண்டநாள் கனவை நனவாக்கியுள்ளதாகவும், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சிறு சிறு தருணங்கள், முடிவில்லாத சிரிப்பு மற்றும் அன்பு நிறைந்த ஒரு இல்லத்தை உருவாக்குவதே உண்மையான வாழ்க்கை எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

X