திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அனிருத்

அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் சாமிக்கும், அம்பாளுக்கும் நடைபெற்ற அபிஷேக வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அனிருத்
Published on: 
Summary

அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அனிருத், 'ஜெயிலர் 2' வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் பிரசாதம் வழங்க, ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்தனர்.

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட 'ஜெயிலர் 2' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார்.

சாமி தரிசனம்

'ஜெயிலர் 2' திரைப்படம் வெற்றி பெற வேண்டி படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நேற்று இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கோவிலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்தார்.

பின்னர் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் சாமிக்கும், அம்பாளுக்கும் நடைபெற்ற அபிஷேக வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

சாமி தரிசனம் முடிந்து திரும்பிய அனிருத்துடன், கோவிலில் கூடியிருந்த ரசிகர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வின் வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com