அனிருத் – காவ்யா மாறனை வாழ்த்தி புகைப்படம் பகிர்ந்த பாடகி ஜோனிடா காந்தி!

அனிருத் இசையில் 'அரபிக் குத்து', 'செல்லம்மா', 'பிரைவேட் பார்ட்டி' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை ஜோனிடா பாடியுள்ளார்.
Jonita - Kaviya Maran - Anirudh
Published on: 
Summary

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னணிப் பாடகி ஜோனிடா காந்தி, புதுமணத் தம்பதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திருமணமும் பிரம்மாண்ட வரவேற்பும்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் மிக எளிமையான முறையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்த அனிருத், "My once in a lifetime, for a lifetime" என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், உள்ளிட்ட திரைத்துறை, அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கவனம் ஈர்த்த ஜோனிடா காந்தியின் பதிவு

சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி ஜோனிடா காந்தி, மணமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "Congrats to the sweetest newly weds" என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையில் 'அரபிக் குத்து' (பீஸ்ட்), 'செல்லம்மா' (டாக்டர்), 'பிரைவேட் பார்ட்டி' (டான்) உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை ஜோனிடா பாடியுள்ளார்.

கடந்த 2022–2023 காலகட்டத்தில் இருவரும் காதலிப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவிய நிலையில், தற்போது அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் ஜோனிடா நேரில் பங்கேற்றுப் புகைப்படம் வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.

X