

பிரதமர் மோடிக்கு அனிருத் - காவ்யா திருமண பத்திரிகை வைக்கப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் திருமணம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற இடத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட வரவேற்பு விழா சென்னையில் வரும் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு குடும்பத்தினர் பத்திரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.
முன்னதாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியிருக்கு பத்திரிகை வைக்கப்பட்டன.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கும் அனிருத் - காவ்யா திருமண பத்திரிகை வைக்கப்பட்டுள்ளது. காவ்யா மாறன் தந்தை கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, காவ்யா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவிற்கான முதல் அழைப்பிதழ் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
விழாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, அவர்கள் முறைப்படி அழைப்பு விடுத்தனர்.
இந்த சந்திப்பின் போது கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதி மற்றும் மணமகன் அனிருத் ரவிச்சந்தரின் பெற்றோரான ரவிச்சந்தர், லட்சுமி ரவிச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.