கிரீஸ் நாட்டில் திருமணம் முடிந்து சென்னை வந்த அனிருத்-காவ்யா மாறன் தம்பதி-ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

வரும் 21ம் ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.
Anirudh-Kavya maran
Published on: 
Summary

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் ஆகியோரது திருமணம் கடந்த புதன்கிழமை, நவம்பர் 11 அன்று கிரீஸ் நாட்டில் உள்ள அழகிய தீவுப் பகுதியில் நடைபெற்றது.

கிரீஸ் நாட்டில் மிகப்பிரமாண்டமாகவும் அதே சமயம் நெருங்கிய உறவினர்கள் சூழவும் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்திற்குப் பிறகு, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இணை உரிமையாளர் காவ்யா மாறன் தம்பதி சென்னை திரும்பினர். தங்களின் திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக ஜோடியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் ஆகியோரது திருமணம் கடந்த புதன்கிழமை, நவம்பர் 11 அன்று கிரீஸ் நாட்டில் உள்ள அழகிய தீவுப் பகுதியில் நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி சுயமரியாதைத் திருமண விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வில், திரைத்துறை மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த மிக முக்கியமான பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கிரீஸ் நாட்டிற்கு நேரில் சென்று இந்தத் திருமண விழாவை வாழ்த்தி பாராட்டினர். குறிப்பாக, திருமண கொண்டாட்டங்களின் போது நடிகர் ரஜினிகாந்த் நடனமாடிய காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவலாகப் பேசப்பட்டன.

திருமண நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் அவர்களுடன் இணைந்து அனிருத் மற்றும் காவ்யா தம்பதி இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கினர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது அங்குத் திரண்டிருந்த ரசிகர்களைப் பார்த்து இசையமைப்பாளர் அனிருத் கையசைத்து வணக்கம் தெரிவித்தார். வரும் 21ம் ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.

பிரபலங்களின் வருகை

இந்தத் திருமண விழாவில் இரு குடும்பங்களின் பெற்றோர்களான ரவி ராகவேந்திரா, லட்சுமி ரவிச்சந்தர் மற்றும் கலாநிதி மாறன், காவேரி மாறன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். மணமக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வெள்ளை மலர் அலங்காரத்தின் பின்னணியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்பொழுது சென்னை திரும்பியுள்ள இந்த நட்சத்திரத் தம்பதிக்குத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

X