முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் தற்போது அவர் முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Published on
Summary

பாலாஜி தரணிதரன் இயக்கிய ‘பத்தா’ பட இசை வெளியீட்டில், அட்லி வழங்கிய வாய்ப்புக்கு நன்றி கூறிய விஜய் சேதுபதி, முதலமைச்சர் விஜய் குறித்து உணர்ச்சியுடன் பேசினார். ஜேசன் சஞ்சயின் மீது தமக்குள்ள பாசம், சிக்மா படப்பிடிப்பு தள அனுபவம், ரோகன் வழியாக வந்த விஜயின் அன்பு செய்தி ஆகியவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

பத்தா இசை வெளியீட்டு விழா

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பத்தா’. படத்தை அட்லி, அவரது மனைவி பிரியா அட்லி, ஸ்டார் ஸ்டூடியோ 18 ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற 1-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. சாய் அபயங்கர் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:-

ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து சொல்லி இருந்தேன். இதற்காக முதலமைச்சர் விஜய் எனக்கு போன் பண்ணி ‘நண்பா’ அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான்’ என்றார். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் அவர் பெரிய சூப்பர் ஸ்டார். சஞ்சய்க்கு என்னை பிடித்திருப்பது பெரிய ஆச்சரியம். நான் சஞ்சயிடமே கேட்டேன். உங்கள் வீட்டில் எவ்வளவு பெரிய ஆள் வைத்திருக்கிறாய் என கேட்டேன். நான் சஞ்சயின் ‘சிக்மா’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இருந்தேன்.

நன்றி

என் நண்பர் ரோகன் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நான் சஞ்சய்யின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்ததை அறிந்த விஜய் ரோகன் மூலமாக எனக்கு ஒரு அன்பான அரவணைப்பை அனுப்பினார். நான் கொடுத்ததாக சொல்லி இதை அவரிடம் கொடுங்கள் என்று விஜய் கூறி அனுப்பி இருந்தார். அவருடைய அந்த செயல் மிகவும் இனிமையானதாகவும், கனிவானதாகவும் இருந்தது. அட்லீ பத்தா படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் தற்போது அவர் முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com