

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினர்.
‘ரணபாலி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக சென்னை வந்த இந்த நட்சத்திரத் தம்பதி, முதலமைச்சரைச் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஷ்மிகா.,
“எனக்கு நினைவிருக்கும் காலத்திலிருந்தே அவரை ஒரு தீவிர ரசிகையாகப் போற்றி வந்தது முதல், அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றது வரை; இன்று ஒரு முதலமைச்சராக இருக்கும் அவரைப் பார்த்து வியப்பது வரையிலான அவரது இந்த பயணம் உண்மையிலேயே வியக்கத்தக்கது!
உங்களுக்கு எப்போதும் எனது அன்பும், மனமார்ந்த நல்வாழ்த்துகளும் சார்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா.,
“தளபதி விஜய்யுடன் மிக அழகான நேரத்தைச் செலவிட்டேன்.
நீண்ட நாட்களுக்கு பிறகும் கூட, அவர் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்றார்; அத்துடன் தனிப்பட்ட வாழ்க்கை, பணி குறித்த கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். ஒரே ஒரு சந்திப்பிலேயே அவர் எனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார்.
மீண்டும் சந்திக்கும் வரை, என் அன்பும், மரியாதையும்.
விஜய் தேவரகொண்டா” எனக் குறிப்பிட்டுள்ளார்.