நானா படேகர் இனி நம்முடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை - ரஜினிகாந்த்

நானா படேகர் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரஜினிகாந்த்- நானா படேகர்
Published on: 
Summary

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தமிழில் ‘பொம்மலாட்டம்’ மற்றும் ‘காலா’ படங்களில் நடித்த நானா, 75 வயதில் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மரணச் செய்தி திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான ‘பொம்மலாட்டம்’ படத்தில் நடித்திருந்தார் நானா படேகர்.

அதனை தொடர்ந்து கடைசியாக தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை நானா படேகர் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரங்கல்

இந்த நிலையில், நானா படேகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

எனது அன்பிற்குரிய நண்பர் நானாஜி இனி நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com