கையில் 'GOAT' மோதிரத்துடன் நடிகர் விஜய் பகிர்ந்த நச் புகைப்படம்!

'விஜய் 69' திரைப்படம் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ளது விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான ரெபெரென்ஸ்கள் கோட் படத்திலும் இருந்தன.
கையில் 'GOAT' மோதிரத்துடன் நடிகர்  விஜய் பகிர்ந்த நச் புகைப்படம்!
Published on

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 'தி கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து 'விஜய் 69' திரைப்படம் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ளது. இதுவே விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தா.வெ.க.வின் முதல் மாநாடு இம்மாதம் 27 ஆம் தேதி விக்ரவாண்டியில் வைத்து நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளிலும் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் 'GOAT' என எழுதப்பட்டிருக்கும் மோதிரத்தை அணிந்து அந்த புகைப்படத்தை விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான ரெபெரென்ஸ்கள் கோட் படத்திலும் ஏராளமாவே இருந்தன.

சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் விஜய் கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைமாக உருவெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் விஜய்யின் இந்த புகைப்படம் அரசியல் சினிமா என இரண்டுக்கும் சிம்பாலிக்காக அமைத்துள்ளது. இதற்கிடையே 'தி கோட்' திரைப்படம் நேற்றைய தினம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com