தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை... வசூலில் கலக்கும் ‘ஜெயிலர் 2’ - ஒருவாரத்தின் கலெக்ஷன் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ரூ.549 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை... வசூலில் கலக்கும்  ‘ஜெயிலர் 2’ - ஒருவாரத்தின் கலெக்ஷன் இத்தனை கோடியா?
Published on: 

‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான ஒருவாரத்திலேயே ரூ.549 கோடிக்கும் மேல் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

அக்.15ம் தேதி வெளியான இப்படம் தமிழ் சினிமாவிலேயே முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதனை போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ திரையரங்குகளில் வெளியானது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி உள்ள இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மிர்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாபர் சாதிக் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.

ரித்திக் ரோஷன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், விஜய் சேதுபதி, அபேக்ஷா போர்வால், மிதுன் சக்ரவர்த்தி, அன்னா ராஜன், ஹக்கிம் ஷா, பகவதி பெருமாள், மேகனா ராஜ், பூர்ணா மற்றும் ஜதின் சர்னா ஆகியோர் புதிய முகங்களாக இணைந்துள்ளனர்.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com