சார்லி சாப்ளின் 2

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் முன்னோட்டம்.
சார்லி சாப்ளின் 2
Published on

சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்தை தயாரித்துள்ளது. அடுத்து ‘சார்லி சாப்ளின்-2’ படத்தை தயாரித்து வருகிறது.

இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சவுந்தர்ராஜன், இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, கலை - ஆர்.கே.விஜய் முருகன், நடனம் - ஜானி, எடிட்டிங் - பென்னி, வசனம் - ‌ஷக்தி சிதம்பரம், ஸ்டண்ட் - கனல் கண்ணன், தயாரிப்பு - டி.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் - ‌ஷக்தி சிதம்பரம்.

“முழுக்க முழுக்க கமர்ஷியல்,காமெடி படமாக சார்லி சாப்ளின் 2 உருவாகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் பிரபுதேவா - சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக்காட்சியும் படமானது. பிரமாண்டான அரங்குகள் அமைக்கப்பட்டு இரண்டு சண்டைக்காட்சிகளும் பட மாக்கப்பட்டன”.

இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com