பரத்தின் புதிய அவதாரத்தை வெளியிட்ட கார்த்தி

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த கார்த்தி, பரத் நடிப்பில் உருவாகி வரும் காளிதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.
பரத்தின் புதிய அவதாரத்தை வெளியிட்ட கார்த்தி
Published on

ஶ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `காளிதாஸ்'.

த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பரத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். காளிதாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி, இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இணைந்து வெளியிட்டனர். 

`நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் மற்றும் இயக்குனரான சிவநேசன் மற்றும் தினகரன் தயாரிக்கும் இந்த படம், இன்வெஸ்ட்டிகேசன் த்ரில்லராக புதிய தோற்றதில் உருவாகி வருகிறது. 

`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சுரேஷ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்திற்கு புவன்  ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com