நீங்க ஒரு பொம்பள நாட்டுக்கட்டையும் கூட - விஜய் சேதுபதியை பாராட்டிய நடிகர்

`சூப்பர் டீலக்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பை கிடைத்திருக்கும் நிலையில், நீங்க பொம்பள நாட்டுக்கட்டையும் கூட என்று நடிகர் அசோக் செல்வன், விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார். #SuperDeluxe #VijaySethupathi
நீங்க ஒரு பொம்பள நாட்டுக்கட்டையும் கூட - விஜய் சேதுபதியை பாராட்டிய நடிகர்
Published on

தியாகராஜன் குமாரராஜா இயக்கி, தயாரித்துள்ள படம் `சூப்பர் டீலக்ஸ்'.

விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் இடம்பெற்றிருந்த விஜய் சேதுபதியில் தோற்றம் குறித்து நடிகர் அசோக் செல்வன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், `காத்திருக்கமுடியாது, அண்ணே, நீங்க ஒரு பொம்பள நாட்டுக்கட்டையும் கூட' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 96 படத்தில் ஒரு காட்சியில், திரிஷா, விஜய் சேதுபதியை பார்த்து நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்ட டா என்று கூறுவார். அதை குறிப்பிட்டு அசோக் செல்வன் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

`ஆரண்ய காண்டம்' படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றத்தில் உருவாகி இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #SuperDeluxe #VijaySethupathi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com