விஜய் 61 படத்தில் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்

அட்லி இயக்கத்தில் விஜய் - காஜல் அகர்வால் - சமந்தா - நித்யா மேனன் இணைந்து நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் 61 படத்தில் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்
Published on

இப்படத்தில் முதன்முறையாக விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

காமெடியை பொறுத்த வரை வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்திருக்கிறது. இந்நிலையில், காமெடிக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com