அனிருத்தை ஷட்டப் பண்ண சொல்லிய யுவன்

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கர் ராஜா அவரது படத்திற்காக இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத்தை ஷட்டப் பண்ண சொல்லியிருக்கிறார்.
அனிருத்தை ஷட்டப் பண்ண சொல்லிய யுவன்
Published on

ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் காதல் கலந்த திகில் படமாக உருவாகி இருக்கிறது. காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

யுவன் இசையில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ``நீங்க ஷட்டப் பண்ணுங்க" என்ற வரிகளுடன் தொடங்கும் அந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார். சமீபத்தில் நடிகை ஓவியா பங்கேற்ற சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் நீங்க ஷட்டப் பண்ணுங்க வார்த்தை பிரபலமாகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com