ஆனந்தி ராசியான வெற்றி பட நாயகி: கிருஷ்ணா

நடிகை ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி என்று பண்டிகை படத்தில் அவருடன் நடித்திருக்கும் நடிகர் கிருஷ்ணா கூறியிருக்கிறார்.
ஆனந்தி ராசியான வெற்றி பட நாயகி: கிருஷ்ணா
Published on

“ ‘கழுகு’, ‘யாமிருக்க பயமேன்’ போன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை ‘பண்டிகை’ படமும் தருகிறது. இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்த கதை என் திரைஉலக வாழ்வில் முக்கிய படமாக இருக்கும். அன்பு, அறிவு என்ற இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை தரும்.

இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி. ‘பண்டிகை’ மேலும் ஒரு வெற்றியை அவருக்கு தரும். சரவணன் இந்த படத்துக்கு பிறகு தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகர்களுக்கு இருக்கும் பஞ்சத்தை தீர்ப்பார். அவரை போலவே நிதின் சத்யாவும், தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார். இசையமைப்பாளர் ஆர்.எச். விக்ரம் பாடல்களிலும், பின்னணி இசையிலும் தனது திறமையை காட்டி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com