சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு

கோவாவில் நடைபெற்று வரும் விழாவில் சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப்ச்சனுக்கு பண்பாளர் விருது வழங்கப்படுகிறது.
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
Published on

இதையொட்டி நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்திய சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த பண்பாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் போது இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வயதாகும் அமிதாப்பச்சன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் சாதனை படைத்துள்ளார். 190 படங்களில் நடித்துள்ளார். 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், 15 முறை பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார்.

இப்போது அவருக்கு சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் விருது வழங்கப்படுகிறது. இந்த திரைப்பட சம்மேளனமானது 1952-ல் தொடங்கப்பட்டது. ஆசியாவின் சிறந்த திரைப்பட விழாக்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com