

பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் - ரஜினிகாந்த் திரைப்பட பெயரையும் இணைத்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளார்கள். இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதம்பாவா தயாரித்து இயக்குகிறார்.
இப்படம் குறித்து ஆதம்பாவா கூறும்போது, ‘இத்திரைப்படம் அமைதிப்படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம்.ஜி.ஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம்.
அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. கதையின் தேவைக்கேற்ப நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மற்றும் மகதி சங்கர், ராஜ் கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மணன், வின்சென்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து, பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைக்கிறார்.