காதல் பாடலில் அஜித் - வித்யா பாலன்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் - வித்யா பாலனுக்கு ஒரு காதல் பாடல் ஒன்று இருக்கிறதாம். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan
காதல் பாடலில் அஜித் - வித்யா பாலன்
Published on

அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. `பிங்க்’ படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்தில் வடிவமைத்துள்ளார் வினோத். அந்த கேரக்டரில் தான் வித்யா பாலன் நடிக்கிறார். இதில் அஜித்-வித்யா பாலனுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய். 

பி.எஸ்.மித்ரன் - சிவகார்த்திகேயன் படத்தின் இசைக்காக துபாய் சென்றுள்ள யுவன், சென்னை திரும்பியதும் இந்தப் பாடலுக்கான பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com