விஜய்யுடன் மீண்டும் இணைந்த சந்தானம்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்தில் நடிகர் சந்தானம் சிறிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யுடன் மீண்டும் இணைந்த சந்தானம்?
Published on

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் இப்படத்தில் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர்.

இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து வருகிறது.

இந்நிலையில், காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது நாயகனாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் சந்தானம் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சச்சின், அழகிய தமிழ்மகன், வேலாயுதம், தலைவா உள்ளிட்ட விஜய் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com