நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.3 லட்சம் நிதி வழங்கிய நிக்கி கல்ராணி

நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்ட வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நிக்கி கல்ராணி ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.3 லட்சம் நிதி வழங்கிய நிக்கி கல்ராணி
Published on

இதில் நடிகர் சங்க கட்டிடத்துடன் இணைத்து, சிறிய திருமண மண்டபமும், முன்னோட்ட அரங்கம் (Preview Theatre)  ஒன்றையும் இணைத்து கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருமண மண்டபத்தை கட்டுவதற்கான செலவை நடிகர் சங்க அறங்காவலர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் முன்னோட்ட அரங்கம் கட்டுவதற்கான செலவை சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுதவிர நடிகர், நடிகைகள் பலரும் கட்டிடம் கட்ட நிதி வழங்கி வருகின்றனர். இதில்,

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ - ரூ.1,55,555
ராதா - ரூ.1,00,000
ஜனனி - ரூ.40,000
சத்யபிரியா - ரூ.25,000
ஜெயசித்ரா - ரூ.10,000
நடிகர் சங்கம் பி.ஆர். ஒ. ஜான்சன் - ரூ.60,000

என பலரும் நன்கொடை அளித்துள்ளனர். இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நிக்கி கல்ராணி நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார். அதற்கான காசோலையை நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரும், நடிகருமான ஸ்ரீமனிடம் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com