விஜய்யின் ‘மெர்சல்’ உள்பட தீபாவளிக்கு வெளியாகும் 5 படங்கள்

விஜய்யின் ‘மெர்சல்’ படம் உட்பட இந்த வருட தீபாவளிக்கு 5 படங்கள் ரிலீசுக்கு உறுதியாகி இருக்கிறது.
விஜய்யின் ‘மெர்சல்’ உள்பட தீபாவளிக்கு வெளியாகும் 5 படங்கள்
Published on

பண்டிகை நாட்களில் பெரிய பட்ஜெட் படங்களையும் மற்ற நாட்களில் சிறு பட்ஜெட் படங்களையும் திரைக்கு கொண்டுவரும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் பட அதிபர்களிடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற அக்டோபர் மாதம் 18-ந் தேதி `மெர்சல்', `குலேபகாவலி', `நெஞ்சில் துணிவிருந்தால்', `சொல்லி விடவா', `ஹரஹர மகாதேவகி' ஆகிய 5 படங்களை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படங்களின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடக்கிறது. 5 படங்களுக்கும் தியேட்டர்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இதில் ‘மெர்சல்’ படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக வருகிறார்கள். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். என்.ராமசாமி, ஹேமா ருக்மணி தயாரித்துள்ளனர்.

மூன்று கால கட்டத்தை உள்ளடக்கிய திகில் படமாக `மெர்சல்' தயாராகி உள்ளது. ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விஷயங்களும் படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் மிரட்டலாக இருக்கும் என்று விஜய் கூறியுள்ளார். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தை அட்லி இயக்கி உள்ளார். ஏற்கனவே விஜய்யின் `தெறி' படத்தையும் இவர் டைரக்டு செய்து இருந்தார்.

அதேபோல் `குலேபகாவலி' படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். கல்யாண் டைரக்டு செய்துள்ளார். அதிரடி, நகைச்சுவை கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. 1955-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆர் படமான `குலேபகாவலி' பெயர் இந்த படத்துக்கு சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பழைய குலேபகாவலியுடன் தொடர்புபடுத்தும் காட்சிகள் புதிய குலேபகாவலி படத்தில் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

‘சொல்லிவிடவா’ படத்தை நடிகர் அர்ஜுன் டைரக்டு செய்துள்ளார். அவருடைய மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாகவும், கன்னட நடிகர் சந்தன்குமார் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், கன்னட மொழிகளில் வெளியாகிறது. காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com