வெளியான 5 நிமிடத்தில் மெர்சல் டீசர் செய்த சாதனை

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் இன்று வெளியான 5 நிமிடத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
வெளியான 5 நிமிடத்தில் மெர்சல் டீசர் செய்த சாதனை
Published on
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மெர்சல். அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக இப்படத்தின் டீசரை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அட்லியின் பிறந்தநாளான இன்று செப்டம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட 7 நிமிடத்தில் 4 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 5 நிமிடத்தில் எந்த படத்திற்கும் இந்த அளவிற்கு வேகமாக பார்வையாளர் பார்த்ததில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மற்ற படங்களின் டீசரை கடந்து புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
X

Maalai Malar
www.maalaimalar.com