இரண்டு புது நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்ட யமஹா எப்.இசட்.எஸ். 25

யமஹா நிறுவனத்தின் எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
யமஹா எப்.இசட்.எஸ். 25
யமஹா எப்.இசட்.எஸ். 25
Published on

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் மாடலை அப்டேட் செய்தது. அதன்படி இந்த மாடல் தற்போது இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. அந்த வகையில், யமஹா எப்.இசட்.எஸ். 25 மாடல் தற்போது மேட் காப்பர் மற்றும் மேட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர இந்த மாடல் ரேசிங் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

முன்னதாக யமஹா எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் - படினா கிரீன், வைட்-வெர்மிலான் மற்றும் டார்க் மேட் புளூ என மூன்று நிறங்களில் மட்டுமே கிடைத்தது. தற்போது இரண்டு புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய சந்தையில் யமஹா எப்.இசட்.எஸ். 25 மோட்டார்சைக்கிள் மொத்தத்தில் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. 

நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் யமஹா எப்.இசட்.எஸ். 25 மாடலில் 249சிசி, ஏர் கூல்டு, எஸ்.ஓ.ஹெச்.சி., 4 ஸ்டிரோக், சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.8 பி.எஸ்.  பவர், 20.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் யமஹா எப்.இசட்.எஸ். 25 மாடலின் விலை ரூ. 1,38,800, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com