குறைவான விலையில் இந்தியாவில் அறிமுகமான ஜாவா 42 பைக்

இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஜாவா 42 பைக் 14 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
jawa 42
Published on

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜாவா பைக் 18 வகை வேரியண்ட்களில் கிடைக்கிறது,

இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 1.98 lakh லட்சதிக்ரு (Ex-Showroom) விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு முந்தைய ஜாவா பைக்குகளை விட இந்த மேம்படுத்தப்பட்ட ஜாவா பைக்கின் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஜாவா 42 பைக் 14 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வகை ஜே-பேந்தர் எஞ்சின் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் 294 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமா 27.32 பிஎஸ் மற்றும் 26.84 என்எம் டார்க் வரை சக்தியை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் அதிக இரைச்சலை ஏற்படுத்தாது என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com