ராசிபலன்கள்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 5.7.2026: இவர்களுக்கு பொருளாதார நிலை உயரும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.

மேஷம்

பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வரவைவிட செலவு கூடும். வாழ்க்கைத்தரம் உயரும்.

ரிஷபம்

பொருளாதார நிலை உயரும் நாள். புதிய எண்ணங்கள் தோன்றும். இளைய சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும்.

கடகம்

விரயங்கள் மேலோங்கும் நாள். குடும்ப உறுப்பினர்களி டம் கோபமாகப் பேசிவிட்டு பிறகு வருத்தமடைவீர்கள். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.

சிம்மம்

சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

கன்னி

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். உடல்நலனில் கவனம் தேவை. பெரியவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

துலாம்

பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். உத்தியோக முன்னேற்றம் உண்டு. வரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்

திறமைகள் வெளிப்படும் நாள். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். உறவினர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று முடிவடையும்.

தனுசு

நல்லது நடக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வரன்கள் வாயில் தேடி வரும். அயல்நாட்டுப் பயண முயற்சி ஆதாயம் தரும்.

மகரம்

தடைபட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். கரைந்த சேமிப்புகளை சரிக்கட்டும் எண்ணம் உருவாகும்.

கும்பம்

வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.

மீனம்

அருகில் இருப்பவர்களால் ஆதாயம் கிட்டும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.