ராசிபலன்கள்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 27.5.2026: இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாள், வருமானம் உயரும்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களைக் காணலாம்.

மேஷம்:

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.

ரிஷபம்:

புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும்.

மிதுனம்:

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பகை மாறும்.

கடகம்:

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும்.

சிம்மம்:

நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

கன்னி:

செல்வநிலை உயரும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

துலாம்:

பம்பரம் போல் சுழன்று பணிபுரியும் நாள். நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்:

மகிழ்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணையாக அமையும்.

தனுசு:

யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர்.

மகரம்:

தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தூர தேசத்திலிருந்து அனுகூல செய்தி வந்து சேரும். கூட்டாளிகளால் நன்மை உண்டு.

கும்பம்:

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் பங்குதாரர்களிடம் மனக்கசப்பு ஏற்படும்.

மீனம்:

மனக்குழப்பம் ஏற்படும் நாள். திடீர் விரயத்தால் சிந்தனைகள் மாறும். குடும்பத்தினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.