ராசிபலன்
இன்றைய பலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 2.10.2026 - இந்த ராசிக்காரர்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

வருமானம் உயரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். தேசப்பற்றுமிக்கவரின் ஒத்துழைப்பால் உத்தியோக முயற்சி கைகூடும்.

ரிஷபம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்

சுப விரயங்கள் ஏற்படும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வீர்கள். மாற்றினத்தவர்கள் மூலம் மகிழ்ச்சிக்குரிய செய்தி கிடைக்கும்.

கடகம்

பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

சிம்மம்

நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளுவதில் கவனம் தேவை.

கன்னி

சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

துலாம்

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். வாகனம் வாங்கும் வகையில் திடீர் செலவுகள் ஏற்படும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

விருச்சிகம்

வரன்கள் வாயில்தேடி வரும் நாள். வாழ்க்கைத்தரம் உயரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

தனுசு

1 விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும்.

மகரம்

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைத் தருவர்.

கும்பம்

யோகமான நாள். உடன் பிறப்புகள் வழியே உதவி கிடைக்கும், விலகிச்சென்ற விவாகப் பேச்சுகள் மீண்டும் வந்து முடிவாகும். வருமானம் திருப்தி தரும்.

மீனம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

SCROLL FOR NEXT