Vox Pop

TN Assembly Election | மயிலம் பகுதியில் வெல்லப்போகும் கட்சி எது? Vox Pop

மயிலம் பகுதியில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மயிலம் பகுதியில் மாலைமலர் தரப்பில் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று சுமார் 66 பேர் கேள்வி கேட்கப்பட்டது. இதில், தி.மு.க.-விற்கும்- த.வெ.க.-விற்கும் சரிசமமாக 21 பேர் வாக்களிப்பதாக தெரிவித்தனர்.

அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 23 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவேன் என்று ஒருவரும் தெரிவித்தனர்.

இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். மே 4ம் தேதி அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் முடிவு தெரியவரும்.