Vox Pop

ராமநாதபுரத்தில் எந்தக் கட்சி முதலிடம்... மக்கள் கருத்து!

ராமநாதபுரம் பகுதியில் திமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு சமமான ஆதரவு உள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

புதிதாக கட்சித் தொடங்கிய விஜய் தான்தான் திமுகவிற்கு போட்டி என்றுக் கூறினாலும் திமுகவிற்கு போட்டியாக அதிமுக தலைமையிலான கூட்டணியே உள்ளது என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மக்களிடையே மாலைமலர் தரப்பில் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ராமநாதபுரம் பகுதியில் கேட்கப்பட்ட கருத்துகளில் திமுக, நாதக, தவெக போன்ற கட்சிகளுக்கு சம அளவு ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் பெரும்பாலான மக்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று ஒரு தெளிவான மனநிலையில் இல்லாமல் இருப்பது தெரிகிறது.