Vox Pop

உங்களுக்கு எதில் விருப்பம் காதல் திருமணமா? பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா?

பெரும்பாலானோர் பெற்றோர் பார்த்து செய்யும் திருமண முறையையே விரும்புகின்றனர்.

‘திருமணம்’ இப்போதெல்லாம் இந்த வார்த்தையை கேட்டாலே இளைய தலைமுறையினர் பலரும் முகத்தை சுழிக்கின்றனர்.

இதற்கு பொறுப்பு, துணைக்கு நேரம் செலவிடுதல், பணத்தேவை உள்ளிட்ட பல காரணிகளை காரணமாக கூறுகின்றனர்.

ஆனால் இந்த காரணங்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இருப்பினும் திருமணம் என்பது பலரது வாழ்விலும் காதலாக, நிகழ்வாக, அங்கமாக, மாற்றமாக, தேவையாக இருக்கிறது.

அப்படிப்பட்ட திருமணம் எப்படி நடைபெறுகிறது என்பதும் இங்கு முக்கியமாக இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் காதல் திருமணங்கள் குடும்பங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பெரும்பாலான ஆதரவு நிச்சயிக்கப்படும் திருமணங்களுக்கே இருக்கிறது.

இந்நிலையில் மக்கள் இந்த அமைப்பை எப்படி பார்க்கிறார்கள் என மாலைமலர் தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்திற்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT