Vox Pop

TN Election 2026: கும்பகோணத்தில் ஜெயிக்கப்போவது யார்? மக்கள் மனநிலை என்ன?

தமிழக சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது

தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, த.வெ.க. என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய கும்பகோணத்தில் vox pops நடத்தினோம். 43 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு திமுக, அதிமுக, தவெக என மாறிமாறி கூறினர்.

திமுக-வுக்கு வாக்களிப்பதாக 18 பேரும், த.வெ.க.விற்கு வாக்களிப்பதாக 14 பேரும், அதிமுக-வுக்கு வாக்களிப்பதாக 10 பேரும் வாக்களித்தனர்.

இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில்தான் நமக்கு தெரியவரும்.