தமிழ் நாட்டில் வருகிற 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தற்போதைய சூழலில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய காட்டுமன்னார்கோயிலில் vox pop நடத்தினோம்.
61 பேரிடம் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டோம். இந்த கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு வாக்களிப்பதாக 26 பேர் தெரிவித்தனர்.
இதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று 16 பேரும், த.வெ.க. கட்சிக்கு வாக்களிப்பதாக 15 பேரும் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதாக இருவரும், இதர வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதாக இருவரும் தெரிவித்தனர்.
இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pop தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.