Vox Pop

TN Assembly Election: கூடலூரில் மக்கள் ஆதரவு யாருக்கு? Vox Pop

சட்டசபை தேர்தலை ஒட்டி கூடலூர் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய vox pop நடத்தப்பட்டது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை ஒட்டி கூடலூர் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஒரு vox pops நடத்தப்பட்டது.

அதில் அப்பகுதி மக்களிடம் 40 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் ஏன் போடுவீர்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்வியின் முடிவில் அதிகபட்சமாக 16 பேர் திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுக கட்சிக்கு 8 பேரும் தவெக கட்சிக்கு 15 பேரும்,மற்றவைக்கு ஒருவரும் வாக்களிப்பதாக தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சிக்கு யாரும் வாக்களிப்பதாக தெரிவிக்கவில்லை.

இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். மே 4ம் வாக்கு எண்ணிக்கையின்போது முடிவு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.