Vox Pop

TN Assembly Election | சிவகாசி தொகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?

இரட்டை இலை, எப்போதும் அ.தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்கப்போம் என்று பலர் தெரிவித்தனர்.

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 10 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் 14 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 3 பேரும், த.வெ.க.விற்கு தான் ஓட்டு என்று 17 பேரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஸ்டாலின் நல்லது செய்கிறார். அவர் மீண்டும் வர வேண்டும். தி.மு.க.விற்கு தான் ஓட்டு என்று தெரிவித்தனர். காங்கிரசுக்கு போடுவோம் என்றும் தெரிவித்தனர்.

இரட்டை இலை, எப்போதும் அ.தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்கப்போம் என்று பலர் தெரிவித்தனர்.

சீமானுக்கு தான் ஓட்டு, நாம் தமிழர் கட்சிக்கு போடுவோம் என்றும் சிலர் தெரிவித்தனர்.

புது வரவான விஜய்க்கு வாய்ப்பு கொடுப்போம். விஜய்க்கு ஓட்டு போடுவோம் என்றும் பலர் தெரிவித்தனர்.