Vox Pop

TN Assembly Election | அயனாவரம் பகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?

மகளிருக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆட்சி நன்றாக இருக்கிறது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி முடிவாகி உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களின் மனநிலையை அறிய மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் vox pops நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 9 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் 11 பேரும், த.வெ.க.விற்கு தான் ஓட்டு என்று 17 பேரும் தெரிவித்தனர்.

மகளிருக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆட்சி நன்றாக இருக்கிறது. தி.மு.க.வுக்கு போடுவோம் என்று பெண்கள் தெரிவித்தனர்.

விலைவாசி உயர்ந்துள்ளது. வீட்டு வரி உயர்ந்து விட்டது. கொரோனா காலத்தில் அம்மா உணவகங்களை நம்பி எத்தனையோ மக்கள் இருந்தார்கள். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் வர வேண்டும். அதனால் இரட்டை இலைக்கு போடுவோம் என்று பலர் தெரிவித்தனர்.

வாய்ப்பு கொடுக்கலாம். மாற்றத்தை கொண்டு வருவோம். தளபதிக்கு போடுவோம் என்று இளைஞர்கள், பெண்கள் தெரிவித்தனர்.