vox pop 
Vox Pop

TN Assembly Election: தேனாம்பேட்டை பகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?

சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேனாம்பேட்டை பகுதி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஒரு vox pops நடத்தினோம்.

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இத்தேர்தலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என கருதப்பட்டதால் அக்கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேனாம்பேட்டை பகுதி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஒரு vox pop நடத்தினோம்.

40 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக திமுகவிற்கு 22 பேர் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.

திமுகவிற்கு அதற்கு அடுத்தபடியாக தவெகவிற்கு 12 பேரும் அதிமுகவிற்கு 5 பேரும் நாம் தமிழர் கட்சிக்கு 2 பேரும் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.