Vox Pop

முதலமைச்சர் விஜயின் 6 மாத கால ஆட்சி எப்படி இருக்கிறது?- மக்கள் கருத்து என்ன?

தவெக அரசின் 6 மாத ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்..

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ஆட்சி குறித்து மக்கள் மத்தியில் எந்த மாதிரியான கருத்துகள் நிலவி வருகின்றன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.

மாலை மலர் சார்பில் சென்னையில் பல்வேறு தரப்பு மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், தவெக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கருத்துகள் வெளிப்பட்டுள்ளன.

இளைஞர்கள், முதல் முறையாக வாக்களித்தவர்கள் மத்தியில், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான அறிவிப்புகள், ஊழலற்ற நிர்வாகம் என்ற அணுகுமுறைக்கு வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், விலைவாசி உயர்வு, மின்சாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்றும், அனுபவம் வாய்ந்த நிர்வாகம் தேவை என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசு தரப்பில், கடந்த 6 மாதங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், முழு பலன்கள் வரும் மாதங்களில் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவெக அரசின் 6 மாத ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த வீடியோ தொகுப்பு வருமாறு...

SCROLL FOR NEXT