Vox Pop

சோஷியல் மீடியா பிரபலங்களை நம்பலாமா? நம்பக்கூடாதா?

பெரும்பாலானோர் சமூக வலைதள பிரபலங்களை நம்புவதில்லை.

சமீபத்தில் மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில், இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக பிக்பாஸ் பிரபலம் ஒருவரது வீட்டில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இப்படி பல சமூக வலைதள பிரபலங்கள் சிலர் இப்படி பல குற்றப்பின்னணி உடைய வழக்குகளில் சிக்குவர். அப்போது இவர்களை பின்தொடர்பவர்கள்?

இதுபோன்ற செய்திகளில் பிரபலங்கள் பலரும் இடம்பெறும்போது பெரும்பாலான பெற்றோருக்கு அவர்களை பின்தொடரும் தங்கள் பிள்ளைகள்மீது கவனம் செல்லும். இது இப்போது இல்ல, நீண்ட நாட்களாக இருக்கும் பேசுப்பொருள்.

அப்போது, இந்த சமூக வலைதள பிரபலங்களை நம்பலாமா? வேண்டாமா? எனும் குழப்பம் நம்மில் எழும்.

இந்நிலையில், பிரபலங்களை நம்பமுடியவில்லை எனும் மனநிலையே பலரிடத்திலும் உள்ளது. மாலைமலர் தரப்பில் பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கேட்பில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

பிரபலங்களை நம்பலாம், நம்பமுடியவில்லை எனும் தலைப்பில் சென்னை எழும்பூர் பகுதி மக்களிடையே கேட்க்கப்பட்ட கருத்தில் பலரும் நம்ப முடியவில்லை எனும் கருத்தையே வெளிப்பட்டுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT