Vox Pop

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? ஏன் வெடிக்கக் கூடாது? மக்களின் கருத்துகள்!

நவ.8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இனிப்பு, புத்தாடை, உறவினர்கள் என மக்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

இவையெல்லாம் அனைத்து பண்டிகைகளிலும் இருக்கும் பொதுவான ஒன்று என்று. ஆனால் இவற்றை தாண்டி தீபாவளி என்றாலே உடன நினைவுக்கு வருவது பட்டாசு.

தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வீட்டில் பட்டாசு வெடிக்க பலரும் தொடங்கிவிடுவர். அதுவும் தீபாவளிக்கு முதல் நாளன்று சாப்பாடு கூட சாப்பிடாமல் நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடிப்பதில் ஆர்வமாக இருப்பர்.

இந்த கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும், பட்டாசு அனைவரும் மகிழ்ச்சியை தருவதாக இருக்காது. பலருக்கும் இது பயத்தை, பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது.

இதனால் பல நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிகப்பட்டுள்ளது. அல்லது குறைந்த நேரம் மட்டுமே வெடிக்கவேண்டும் என்றும் உத்தரவுகள் கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாலைமலர் தரப்பில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? வெடிக்கக்கூடாதா? என கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் பெரும்பாலானோர் வெடிவெடிப்பது நல்லதுதான் என கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT