மழைக்காலம் தொடங்கிவிட்டாலே போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்குவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வாலும், ஆட்டோ மற்றும் உணவு டெலிவரி கட்டணங்களின் உயர்வாலும் சாமானிய மக்களின் பாக்கெட் காலியாகி வருகிறது.
மழைக்காலத்தில் வெளியே சென்று பொருட்களை வாங்க முடியாத சூழலில், பொதுமக்கள் உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் டெலிவரி செயலிகளை அதிகம் நாடுகின்றனர். ஆனால், மழைக்காலக் கூடுதல் கட்டணம் என்ற பெயரில் அதிகத் தொகை வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மழைக்காலத்தில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் தாமதமாவதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் எரிபொருள் மற்றும் பயணச் செலவுகளும் பன்மடங்கு உயர்ந்துள்ளன.
தொடர்ந்து மழையால் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்களின் தரப்பில் கருத்துக்கள் கூறப்படுகிறது.
மழைக்காலத்தில் போக்குவரத்து மற்றும் புட் டெலிவெரி கட்டணங்கள் உயர்வு தொடர்பாக மாலைமலர் சார்பில் vox pop நடத்தப்பட்டது. அதில், விலை உயர்வு குறித்து சென்னைவாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கீழே உள்ள வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்.