காலம் மாற மாற காதல் மற்றும் திருமணம் குறித்த இளைய தலைமுறையினரின் பார்வையும் மாறி வருகிறது. ஒரு காலத்தில் திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் பேசுவதே தவறு என்று கருதப்பட்ட நிலையில், தற்போது திருமணத்திற்கு முன்பு டேட்டிங் செய்வது அவசியமா? என்ற விவாதம் சமூகத்தில் வலுவாக எழுந்துள்ளது.இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பல்வேறு தரப்பினர் தங்களது மாறுபட்ட கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
திருமணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவு. அதனால் திருமணத்திற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள டேட்டிங் அவசியம் என்பது ஒரு தரப்பினரின் வாதமாக உள்ளது.
"டேட்டிங் என்பது தவறு இல்லை. ஒருவருடைய குணம், பழக்கவழக்கங்கள், எண்ணங்களை திருமணத்திற்கு முன்பே தெரிந்து கொள்வது நல்லது. இது எதிர்காலத்தில் விவாகரத்து போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும்" என இளைஞர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் இதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். "நமது கலாச்சாரத்தில் திருமணத்திற்கு முன்பு டேட்டிங் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்யும் திருமணமே நிலையானது. டேட்டிங் என்ற பெயரில் எல்லை மீறுவது தவறு" என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சிலர் நடுநிலையான கருத்தை முன்வைத்தனர். "டேட்டிங் செய்வது சரியா தவறா என்பது அவரவர் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தது. கண்ணியமாக, பெற்றோருக்கு தெரியப்படுத்தி, எல்லைக்குள் பழகினால் அது தவறில்லை. ஆனால் அதை தவறாக பயன்படுத்தினால் அது தவறு தான்" என அவர்கள் கூறினர்.
ஒட்டுமொத்தமாக, இந்த வீடியோவில் பொதுமக்களின் மாறுபட்ட கருத்துகள் இன்றைய சமூகத்தின் மனநிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
மக்கள் கருத்து: சரி என்று 54 சதவீதம் பேரும், தவறு என்று 45 சதவீதம் பேரும், கருத்தில்லை என தெரிவித்துள்ளனர்.
யூடியூப்: சரி என்று 45 சதவீதம் பேரும், தவறு என்று 6 சதவீதம் பேரும் கருத்தில்லை என 14 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம்: சரி என்று 59 சதவீதம் பேரும், தவறு என்று 34 சதவீதம் பேரும் கருத்தில்லை என 17 பேரும் தெரிவித்துள்ளனர்.
டுவிட்டர்: சரி என்று 100 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துளள்னர்.