Vox Pop

கொளத்தூரில் அடுத்த MLA யார்: DMKVsTVK! மக்கள் சொன்னது என்ன?

விஜய்யின் த.வெ.க. தனது வெற்றியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கொளத்தூர் தொகுதியில் மீண்டும் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற த.வெ.க.வின் வி.எஸ். பாபு, கடந்த நவம்பர் 19-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

இதனால் கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. ஏற்கெனவே தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் கோட்டையாக இருந்த கொளத்தூர் தொகுதியை மீண்டும் கைப்பற்ற திமுக தயாராகிறது. மறுபுறம், விஜய்யின் த.வெ.க. தனது வெற்றியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மக்கள் கருத்து:

கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலினே மீண்டும் போட்டியிடுவாரா? த.வெ.க. சார்பில் யார் களமிறங்குவார்? மக்கள் ஆதரவு தி.மு.க.விற்கா, த.வெ.க.-விற்கா? கொளத்தூர் தொகுதி மக்களிடம் மாலைமலர் சார்பில் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்தவர்களில் 31 பேர் தி.மு.க. விற்கு வாக்களிப்போம் என்றும் த.வெ.க.விற்கு வாக்களிப்போம் என்று 29 பேரும், அ.தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று 3 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதாக ஒருவரும், இதர வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதாக 2 பேரும் கருத்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT