Vox Pop

Influencer ஆக வேண்டும்.. இதுதான் இன்றைய தலைமுறையின் ஆசையா?- மக்கள் கருத்து என்ன?

மாலைமலர் சார்பில் எடுக்கப்பட்ட vox pop-ல் மக்கள் கூறிய கருத்து என்ன?

ஒரு காலத்தில் பிள்ளைகளிடம் "பெரியவனானா என்ன ஆகணும்?" என்று கேட்டால், டாக்டர், இன்ஜினியர், போலீஸ், டீச்சர் என்று பதில் வரும். ஆனால் இன்று... 7 வயது குழந்தையிடம் கேட்டால் கூட, "YouTuber ஆகணும், Influencer ஆகணும்" என்று YouTube logo-வை வரைந்து காட்டுகிறது இன்றைய தலைமுறை.

ஆம்.. கையில் ஒரு மொபைல், கொஞ்சம் followers, கொஞ்சம் likes... இதுவே போதும், பணம், புகழ், சுதந்திரம் எல்லாம் கிடைத்துவிடும் என்று நம்புகிறது இளைய தலைமுறை. உலகளவில் நடந்த ஆய்வுகள் என்ன சொல்கின்றன தெரியுமா?

60% க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் Influencer ஆக விரும்புகிறார்கள். Gen Z-ல் 57% பேர், தங்கள் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆக தயார் என்று சொல்கிறார்கள்.

ஒரு பக்கம் டாக்டர், எஞ்சியனியரை-ஐ விட Influencer அதிகம் சம்பாதிக்கிறாங்க. இது தான் புது காலத்து தொழில் என்கிறார்கள்.

மறுபக்கம் Influencer என்பது வேலையே இல்லை. Algorithm தான் உங்க Boss. இன்னைக்கு 2 Million views, நாளைக்கு 500 views. நிரந்தரமே இல்லாத வாழ்க்கை என்றும், எல்லோரும் Influencer ஆகிட்டா, Doctor, Engineer, Teacher யார் ஆவாங்க? சமூகம் என்ன ஆகும்? இது நாகரீகத்தின் முடிவு" என்று கவலைப்படுகிறார்கள்.

இதுகுறித்து மாலைமலர் சார்பில் எடுக்கப்பட்ட vox pop-ல் மக்கள் கூறிய கருத்தின் வீடியோ தொகுப்பை கீழே காணலாம்.

SCROLL FOR NEXT