Vox Pop

தீபாவளிக்கு Online Shopping-ஆ? கடைகளில் வாங்குவதா?

பல்வேறு நிறுவனங்களின் விலைகளை ஒப்பிட்டு பார்த்து, தள்ளுபடிகளுடன் பொருட்களை வாங்க முடியும்.

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிடும். இந்த தீபாவளிக்கு பொருட்களை ஆன்லைனில் வாங்குவதா அல்லது நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்குவதா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.

ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் பல நன்மைகள் உள்ளன. வீட்டில் இருந்தபடியே நமக்கு தேவையான பொருட்களைதேர்வு செய்யலாம். நேரம் மிச்சமாகும். பல்வேறு நிறுவனங்களின் விலைகளை ஒப்பிட்டு பார்த்து, தள்ளுபடிகளுடன் பொருட்களை வாங்க முடியும். ஆனால், சில நேரங்களில் படத்தில் பார்ப்பது போன்ற தரம் பொருட்களில் இல்லாமல் போகலாம். மேலும், டெலிவரி தாமதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மறுபுறம், கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் தனி மகிழ்ச்சியே இருக்கிறது. குறிப்பாக, தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கும்போது நேரில் பார்த்து, அணிந்து பார்த்து நமக்கு பிடித்ததைதேர்வு செய்யலாம். குடும்பத்தினருடன் கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்வது தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அதே நேரத்தில், கூட்ட நெரிசலும் நேர விரயமும் இருக்கலாம்.

மக்கள் கருத்து என்ன?

எனவே, ஆன்லைன் ஷாப்பிங்காக இருந்தாலும் சரி, கடைகளில் நேரடியாக வாங்குவதாக இருந்தாலும் சரி, நமது வசதி, தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற முறையை தேர்வு செய்வதே சிறந்தது. எப்படி பொருட்களை வாங்குகிறோம் என்பதைவிட, மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளியை கொண்டாடுவதுதான் முக்கியம்!

அந்த வகையில், தீபாவளிக்கு ஆன்லைன் ஷாப்பிங் சிறந்ததா? கடைகளில் வாங்குவது சிறந்ததா என்பது பற்றி சென்னை மக்கள் சொல்வது என்ன என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்..

SCROLL FOR NEXT